ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து விற்பனை ஆனது. வெள்ளை வாவல் மீன் ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை ஆனது.

Update: 2023-07-09 22:01 GMT

ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து விற்பனை ஆனது. வெள்ளை வாவல் மீன் ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனை ஆனது.

மீன்பிடி தடைக்காலம்

ஈரோடு ஸ்டோனி பாலம் அருகில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்கள் ஈரோட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சாதாரண நாட்களில் 15 டன்கள் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் 20 டன்னுக்கு மேல் மீன்கள் விற்பனை ஆகும்.

மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மீன்கள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் 20 டன்கள் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம், காரைக்கால், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் இருந்து வெறும் 8 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது.

விலை உயர்வு

மீன்கள் வரத்து குறைந்ததால் கடந்த வாரத்தை விட நேற்று விலை உயர்ந்து விற்பனை ஆனது. குறிப்பாக கடந்த வாரம் ரூ.900-க்கு விற்பனையான ஒரு கிலோ வஞ்சரம் மீன் நேற்று மேலும் ரூ.100 உயர்ந்து ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் ரூ.900-க்கு விற்ற வெள்ளை வாவல் மீன் ரூ.400 விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது. ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

அயிலை-ரூ.300, மத்தி-ரூ.250, வஞ்சரம்-ரூ.1,000, விளா மீன்-ரூ.350, பாறை மீன்-ரூ.500, முரல்-ரூ.350, நண்டு (சிறியது)-ரூ.400, நண்டு-ரூ.750, இறால்-ரூ.600, சீலா-450, வெள்ளை வாவல்-ரூ.1,300, கருப்பு வாவல்-ரூ.850, மயில் மீன்-ரூ.700, கிளி மீன்-ரூ.600, கடல் விலாங்கு-ரூ.350, திருக்கை-ரூ.500.

Tags:    

மேலும் செய்திகள்