அகவிலைப்படி வழங்க வேண்டும்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-07-30 20:31 GMT


ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மனு அளிக்கப்பட்டது.

அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்கத்தின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் விருதுநகரில் தங்கம் தென்னரசிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த காலங்களில் தி.மு.க. ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. போக்குவரத்து கழகங்களை உருவாக்கி தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அகவிலைப்படியும் வழங்கியது தி.மு.க. ஆட்சியில் தான். ஆனால் கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்குவதை நிறுத்திவிட்டனர்.

நிதி ஒதுக்கீடு

இதனால் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தான் நம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற எண்ணத்தில் தி.மு.க.வுக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் வாக்களித்தனர்.

எனவே மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வறுமையில் வாடி வரும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து அகவிலைப்படி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்