டி.என்.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வில் புதிய நடைமுறை..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது.

Update: 2023-09-15 15:24 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அரசுப் பணியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடர்பான நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் விதமாக அதன் நடைமுறைகளில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் நேர்முகத்தேர்விற்கான புதிய நடைமுறைகள் வெளியிட்டுள்ளது. நேர்முகத் தேர்வுகளுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பெயர், நிழற்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அடையாளங்கள் மறைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக விண்ணப்பதாரர்களை ஏ.பி.சி.டி (A,B,C,D) முதலான எழுத்துக்களைக் கொண்டு குறியீடு செய்து நேர்காணல் அறைகளுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

இப்புதிய நடைமுறைகளுடன் ஏற்கனவே உள்ள (Random shuffling) முறையும் சேர்த்து பின்பற்றப்பட உள்ளதால் விண்ணப்பதாரர்கள் மீது சார்புத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நீக்கப்படுவதுடன் வெளிப்படைத் தண்மை அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்