திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 டன் நெல்
1,000 டன் நெல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1,000 டன் நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயிலில் ஈரோட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மூட்டைகளை நேற்று தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.