திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக நேற்று முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-13 12:53 GMT

இதில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறும்போது, 'இந்த கல்லூரிக்கு தேசிய மருத்துவ ஆணையம் இளநிலை மருத்துவ படிப்பிற்கு ஆண்டிற்கு 100 இடங்கள் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி தற்போது இந்த கல்வியாண்டிலும் 100 மருத்துவ மாணவ மாணவியர்கள் சேர்ந்துள்ளனர். 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டில் வருடத்திற்கு 6 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர். இக்கல்லூரியில் மிகப் பிரமாண்டமான 5 விரிவுரை அரங்குகளும், ஒவ்வொரு மருத்துவத் துறைக்கும் தனித்தனியாக ஆய்வுக்கூடங்களும், ஆராய்ச்சி கூடங்களும் உள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டில் 100 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மருத்துவ கல்லூரியில் பயில வருகை புரிந்துள்ள அனைத்து முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் நல்ல முறையில் கற்றறிந்து சிறந்த மருத்துவர்களாக திகழ வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். ஜெ.ரேவதி, துணை முதல்வர் டாக்டர். திலகவதி, மற்றும் டாக்டர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்