திருப்பத்தூர் மாணவர்கள் சென்னை பயணம்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் பங்கேற்க திருப்பத்தூர் மாணவர்கள் சென்னைக்கு சென்றனர்.

Update: 2023-06-29 17:27 GMT

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை (சனிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 306 வீரர்களும், 269 வீராங்கனைகளும் என மொத்தம் 575 பேர் 54 வகையான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்

இதில் ஒருபகுதியாக வாலிபால், கபடி, சிலம்பம் போட்டிகளில் பங்கேற்க உள்ள 62 வீரர,் வீராங்கனைகள் நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு பஸ்சில் புறப்பட்டனர். அவர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். வீரர், வீராங்கனைகளுடன் அணி மேலாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள் செல்கின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சேதுராஜன் மற்றும் பயிற்றுனர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்