அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருநட்சத்திர வைபவ மகோற்சவ விழா

அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில் திருநட்சத்திர வைபவ மகோற்சவ விழா நடைபெற்றது.

Update: 2023-02-04 18:45 GMT

விழுப்புரம் அருகே அரசமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருந்தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருநட்சத்திர வைபவ மகோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு 39-ம் ஆண்டாக திருநட்சத்திர வைபவ மகோற்சவ விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு சுப்ரபாதம், 5.30 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி புறப்பாடும், காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், 10 மணி முதல் 12.30 மணி வரை லட்சுமி மகா சுதர்சன ஹோமமும், 12.30 மணிக்கு பூர்ணாகுதி, கடம் புறப்பாடு, திருவாராதனம், சாற்றுமுறை, ஆரத்தியும் நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்