திருச்செங்கோடு புதுப்பெண் தற்கொலை: 3-வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

திருச்செங்கோட்டில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண் உடலை வாங்க மறுத்து சேலத்தில் 3-வது நாளாக அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-11 20:09 GMT

பெண் என்ஜினீயர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவருடைய மகள் வசுமதி (23). என்ஜினீயரான இவருக்கும், நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில், வரதட்சணை கேட்டு வசுமதியை அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த வசுமதி கடந்த மாதம் 30-ந் தேதி தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனிடையே, கடந்த 9-ந் தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வசுமதியின் கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

3-வது நாளாக போராட்டம்

இந்தநிலையில், வசுமதியின் தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் எனக்கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் நேற்று 3-வது நாளாக புதுப்பெண் வசுமதியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், வினோத் மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்