திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் நூலக நாள் விழா

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் நூலக நாள் விழா நடைபெற்றது.

Update: 2023-04-11 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியில் அன்னை தெரசா வாசகர் வட்டம் சார்பில் நூலக நாள் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் நா.கலைக்குருச்செல்வி தலைமை தாங்கினார். நூலகர் பிரின்சி லிடியா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை லட்சுமி நாராயணி கலந்து கொண்டு பாரதி பாஸ்கர் எழுதிய 'நதி போல ஓடிக் கொண்டிரு' என்ற புத்தகத்தில் உள்ள கருத்துகள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினருக்கு கல்லூரி இணை பேராசிரியை சங்கீதா நினைவு பரிசு வழங்கினார். மாணவிகள் செல்வ சுவேதா, சண்முகபிரியா ஆகியோருக்கு நூலக பயன்பாட்டிற்கான பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி துணை முதல்வர் பெண்ணரசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்