ஆண்டாள் கோவிலில் தீர்த்தவாரி
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோவிலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்துக்குறி வைபவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழாவில் முத்துக்குறி வைபவம் நடைபெற்றது. ஆண்டாள் கண்ணனை நினைத்து காதல் கொண்டு தனக்கு எப்போது திருமணம் நடக்கும் என குறி சொல்பவர்களிடம் குறி கேட்டதாக ஐதீகம்.
இதனை விவரிக்கும் வகையில் முத்துக்குறி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அரையர் நடனமாடி வியாக்கியானம் செய்து ஆண்டாளுக்கு குறி சொல்லும் நிகழ்ச்சியை நடத்தினார். அப்போது ஆண்டாள் கைத்தறி புடவையில் பக்தா்களுக்கு காட்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
தீர்த்தவாரி
இதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளத்தில் ஆண்டாள், ெரங்க மன்னார் தீர்த்தமாடினர்.
இதையடுத்து அவர்கள் சிறப்பு அலங்காரத்தில் வாழைகுளம் தெரு மண்டபத்தில் எழுந்தருளினர். பின்பு ரத வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.