மானிய விலையில் விவசாயிகளுக்கு உழவு எந்திரம்

சீர்காழி அருகே மானிய விலையில் விவசாயிகளுக்கு உழவு எந்திரம்:பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பங்கேற்பு

Update: 2023-09-05 18:45 GMT

சீர்காழி:

தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2023-24-ன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு உழவு எந்திரம் (பவர் டில்லர்) வழங்கப்பட்டது. அதன்படி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பவர் டில்லர் எனும் கைடிராக்டர் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் செயலாளர் அன்புசெழியன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.85 ஆயிரம் மானியத்துடன் பவர் டில்லரை வழங்கினார்.இதில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமல ஜோதி தேவேந்திரன், ஆத்மா தலைவர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், தி.மு.க. நிர்வாகிகள் கமலநாதன், ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்