வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

Update: 2022-10-28 21:32 GMT

சேரன்மதேவி சந்தனமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூர்ணஆனந்த் (வயது 28).இவர் சேரன்மதேவி போலீஸ் நிலைய பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், சேரன்மதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜா ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று பூர்ணஆனந்தை, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து பூர்ண ஆனந்த் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை மதுரை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜா நேற்று வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்