விவசாயி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஒட்டன்சத்திரம் அருகே கொலை வழக்கில் விவசாயி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஜோகிபட்டி ஊராட்சி கருமாசநாயக்கனூரை சேர்ந்தவர் வையப்பன் (வயது 55). கடந்த மாதம் இவர் நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே ஊரை சேர்ந்த விவசாயி சக்திவேல் (50) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலெக்டர் விசாகனிடம் பரிந்துரை செய்தார். அதன்பேரில் சக்திவேலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திண்டுக்கல் சிறையில் இருந்த அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.