சேலம்
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் கோகுல்நாத் (வயது 30). அதே பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் கோபிநாதன் (30) மற்றும் வெங்கடேஷ் (35). இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடந்த மாதம் 30-ந்தேதி முன்விரோதம் காரணமாக பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை வெட்டிக்கொலை செய்தனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் 3 பேரும் பல்வேறு வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளதாகவும், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல், பரிந்துரை செய்தார். 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் சிறையில் உள்ள கோகுல்நாத், கோபிநாதன், வெங்கடேஷ் ஆகிய 3 பேரிடம் போலீசார் வழங்கினர்.