ெகாலைமிரட்டல் விடுத்த 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

ெகாலைமிரட்டல் விடுத்த 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை

Update: 2023-03-03 20:28 GMT

செங்கல் சூளை தொழிலாளிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்த 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கொலைமிரட்டல்

சுவாமிமலை அருகே உள்ள கொத்தங்குடி தட்டுமாலை சேர்ந்தவர் விஜயா (வயது38), ராஜமாணிக்கம் (50). இவர்கள் 2 பேரும் செங்கல் சூளையில் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2011-ம் ஆண்டு மே 7-ந்தேதி தேவனாஞ்சேரியை சேர்ந்த பரமசிவம்(56), வேல்முருகன் (40), லோகநாதன்(38) ஆகிய 3 பேரும் சேர்ந்து, விஜயா, ராஜமாணிக்கம் ஆகியோரை தனது செங்கல் சூளைக்கு ஏன் வேலைக்கு வரவில்ைல என கூறி அவர்களை தாக்கி அவர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

தலா 3 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் -2 கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்றுமுன்தினம் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கல் சூளை தொழிலாளிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்த 3 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பரமசிவத்திற்கு ரூ.20 ஆயிரமும், மற்ற 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்