ஒரு மணி நேரத்தில் கருகிய மூன்று கோடி கஞ்சா : தீவைத்து அழித்த போலீஸ்
3 கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருளை போலீசார் பாதுகாப்பாக அழித்தனர்.
நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே 3 கோடியே 26 லட்ச ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதைப்பொருளை போலீசார் பாதுகாப்பாக அழித்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில், கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடம் இருந்து ஆயிரத்து 300 கிலோ கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றை பாப்பாங்குளம் பொத்தையடியில் உள்ள அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோமெடிக்கல் வேஸ்ட் ஆலையில், திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் எரித்து அழித்தனர்.