பணம் கேட்டு மிரட்டிதாயை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
தேனியில் பணம் கேட்டு மிரட்டி தாயை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி சிவராம்நகரை சேர்ந்த கோபால் மனைவி விக்டோரியா (வயது 70). இவருடைய மகன் தங்கபாண்டியன் (32). இவர் தனது தாயாரிடம் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிள், மடிக்கணினி வாங்கி தருமாறும், பணம் கேட்டும் அவர் தனது தாயார் விக்டோரியாவிடம் தகராறு செய்தார். அப்போது அவர் தாய் என்றும் பாராமல் அவரை செருப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் விக்டோரியா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.