சசிகலா புஷ்பா வீடு மீதுகல்வீசி தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும்:பா.ஜனதா வலியுறுத்தல்
சசிகலா புஷ்பா வீடு மீதுகல்வீசி தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சித்ராங்கதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீட்டில் நிறுத்தப்பட்ட கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை தி.மு.க.வினர் கல்வீசி சேதப்படுத்தி உள்ளனர். இதுதொடர்பாக நாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார். நாங்கள் சட்டம்-ஒழுங்கை மதித்து நடந்து உள்ளோம்.
நாளை (அதாவது இன்று) காலை 8 மணிக்குள் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் காலை 11 மணிக்கு தொண்டர்களுடன் அமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.