தபால் அட்டையில் திருவிளையாடல் ஓவியங்கள்

தபால் அட்டையில் திருவிளையாடல் ஓவியங்களை வரைந்து தனியார் பள்ளி ஆசிரியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2023-07-17 21:41 GMT


மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜூபாண்டியன் (வயது 54). தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், தபால் அட்டையில் திருவிளையாடல் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறிய வயதில் இருந்தே வரைவதில் ஆர்வம் இருந்தது. அதுமட்டுமின்றி, இன்லாண்டு லெட்டர், தபால் அட்டைகளின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதுகுறித்து மக்களுக்கும், வரும் கால சந்ததியினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். அதன்படி, திருவிளையாடல் புராண கதை படித்து, 64 திருவிளையாடல்களையும் 64 தபால் அட்டைகளில் வண்ண ஓவியங்களாக வரைந்து, அதற்கான விளக்கத்தை பின்புறம்எழுதி உள்ளேன். தொடர்ந்து இதுபோல், தபால் அட்டையில் படங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மக்கள் அனைவரும் தபால் அட்டையை பயன்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்