சக்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

சக்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-01-07 19:15 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே சேரம்பாடியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையெட்டி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தீபாராதனை நடந்தது. காலை 8 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் திரளானோர் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். மேலும் மக்கள் ஒற்றுமையுடனும், நலமுடன் வாழவும், அனைத்து செல்வங்கள் கிடைக்கவும் வேண்டிக்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி பேரவை அமைப்பு செய்திருந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்