மழை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
மழை முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சி மேலக்கொறுக்கையில் மழை முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.