முச்சந்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
வெளிப்பாளையம் முச்சந்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நாகை வெளிப்பாளையத்தில் முச்சந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இதைத் தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரம், அம்மன் வீதி உலா, ஊஞ்சல் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விளக்கு பூஜையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர்.