அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தாயில்பட்டி
ஏழாயிரம் பண்ணை எட்டாம் கூட்ட நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள புத்தம்மன் கோவிலில் குடும்ப பிரச்சினை தீரவும், குழந்தை வரம் வேண்டியும், சிறப்பு பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். அதனைத்தொடர்ந்து 301 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட சிம்ம வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.