திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம்

திருவாடானை சினேகவல்லி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2023-07-21 18:45 GMT

தொண்டி, 

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று 9-ம் நாள் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. நேற்று காலை கோவிலில் இருந்து விநாயகர் சினேக வல்லி அம்மன் தேர் நிலைக்கு எழுந்தருளினர். அதனை தொடர்ந்து மாலை 3 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. சப்பரத்தில் விநாயகரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு அலங்காரத்தில் சினேகவல்லி அம்மனும் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். இதில் ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன், 22½ கிராம நாட்டார்கள், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கணேசன், போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜு, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன், திருவாடானை ஊராட்சி தலைவர் இலக்கியாராமு, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி செங்கைராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்