திருப்புவனம் ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்புவனம் ஒன்றிய தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Update: 2023-08-07 19:00 GMT

திருப்புவனம்

திருப்புவனத்தில் ஒன்றிய நகர தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட கழக துணை செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவருமான சேங்கைமாறன் தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வசந்திசேங்கைமாறன், கடம்பசாமி, நகர் செயலாளர் நாகூர்கனி, யூனியன் துணைத்தலைவர் மூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், ஒன்றிய கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன், இளங்கோவன், ராமலிங்கம், ஈஸ்வரன், சுப்பையா, வெங்கடேசன், அக்கினிராஜ், ரவி, மகேந்திரன், மீனாட்சிசுந்தரம், ராமு, மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சேகர், மீனவரணி அண்ணாமலை, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்