அபிமுக்திஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூர் அருகே அபிமுக்திஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

Update: 2023-06-26 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் பட்டமங்கலம் ஊராட்சி புழுதிக்குடியில் ஆனந்தவள்ளி,அம்பிகா சமேத அபிமுக்திஸ்வரர் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சிவன் மேற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் 11-ந் தேதி குடமுழுக்கு விழா நடந்தது. குடமுழுக்கு முடிந்து நேற்று முன்தினம் மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. இதில் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, சங்கல்யம், கலச பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் மண்டபத்தில் ஆனந்தவள்ளி, அபிமுக்தீஸ்வரர் சாமி திருக்கல்யாண மேடைக்கு எழுந்தருளினர். முன்னதாக பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்தனர். இதையடுத்து வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்