கோவிந்தராஜீலு கோவிலில் திருக்கல்யாணம்
பர்கூர் அருகே கோவிந்தராஜீலு கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
பர்கூர்
பர்கூர் அருகே உள்ள சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் கோவிந்தராஜீலு சாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அங்கு சிறப்பு பூஜை, அலங்காரம் செய்யப்பட்டு மாலை மாற்றி கோவிந்தராஜீலு சாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமிக்கு மொய் எழுதி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.