திருக்கல்யாணம்
மெலட்டூர் சித்திபுத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
மெலட்டூர் சித்திபுத்தி தட்சிணாமூர்த்தி விநாயகர் கோவில் 108 கணபதி தலங்களுள் 81-வது தலமாக மெலட்டூரில் தனிக்கோவில் கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சாமி பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. 4-ம் நாள் நிகழ்ச்சியில் வெள்ளி பல்லக்கிலும், 5-ம் நாள் நிகழ்ச்சியில் ஓலை சப்பரத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை தட்சிணாமூர்த்திக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். இதில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.