திருமங்கலத்தில் பூட்டிக்கிடந்த வங்கியில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

திருமங்கலத்தில் பூட்டிக்கிடந்த வங்கியில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2023-05-20 20:23 GMT

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், விருதுநகர் ரோடு பகுதியில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. இந்த வங்கியில் மாலை வழக்கம் போல் பணி முடிந்ததும் வங்கியை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் காலை 6 மணி முதல் வங்கியில் உள்ள எச்சரிக்கை அலாரம் திடீரென ஒலித்தது. இதனால் மா்ம நபர்கள் யாரும் வங்கியில் நுழைந்துவிட்டார்களா? என அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வங்கியின் முன்பு பலர் கூடினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். வங்கியில் சோதனை செய்தபோது, மின் ஒயரில் ஏற்பட்ட பழுது காரணமாக அலாரம் தானாகவே ஒலித்தது தெரியவந்தது. இதையடுத்து பரபரப்பு அடங்கி, அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்