அரசு பள்ளியில் கோவில் இடத்தை இடித்ததால் பரபரப்பு

அரசு பள்ளியில் கோவில் இடத்தை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-29 17:27 GMT

ஜோலார்பேட்டை

அரசு பள்ளியில் கோவில் இடத்தை இடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டறம்பள்ளி தாலுகா ஆத்தூர் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ஜங்காலபுரம் பகுதியில் அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி தொடங்குவதற்கு 44 வருடங்களுக்கு முன்பு 1978-ம் ஆண்டு நாட்டறம்பள்ளி ெதாகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திம்மராயகவுண்டனர், கோவில் கட்டுவதற்கு இடம் ஒதுக்கி தந்துள்ளார். அப்போதைய சூழ்நிலையில் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள கோவிலை இடித்துவிட்டு இதை கட்டலாம் என்று கூறியதால் ஏற்பட்ட பிரச்சினையில் பணிகள் பாதியிலேயே நின்றன.

அதற்கு பின்பு அந்த கோவில் இருக்கும் இடத்திலேயே அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது.

ஆனால் பாதியிலேயே நின்ற கோவில் கட்டும் பணி தற்போது வரை முடிவடையவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென ஊராட்சி மன்ற தலைவர் சார்பில் கோவில் கட்ட தொடங்கிய இடத்தில் உள்ள கருங்கற்களை இடித்து டிராக்டரில் ஏற்றிச் சென்றுள்ளனர். பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த நாட்டறம்பள்ளி தாசில்தார் த.குமார் விரைந்து சென்று ஊராட்சி மன்ற தலைவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் இடத்தை இடிக்க வேண்டாம் என கூறியதின்பேரில் கோவில் இடத்தை இடிக்காமல் பாதியில் திரும்பிச் சென்றனர்.

மேலும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்