பஸ் நிறுத்தம் அருகே கிடந்த மூட்டையால் பரபரப்பு

பஸ் நிறுத்தம் அருகே கிடந்த மூட்டையால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-01-06 19:56 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உத்திரகுடி பஸ் நிறுத்தம் அருகே துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டப்பட்ட நிலையில் கிடந்த சாக்கு முட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது தெரியவந்தது. இதனால் யாரையேனும் மர்ம நபர்கள் கொலை செய்து, உடலை சாக்கு மூட்டையில் கட்டி, இங்கு கொண்டு வந்து வீசிச்சென்றார்களா? என்று அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து, ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது, இறந்த நாயின் உடல் சாக்கு முட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுபோன்று இறந்த செல்லப்பிராணிகளின் உடலை சாக்கு முட்டையில் கட்டி வீசக்கூடாது என்று பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்திவிட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்