அதிமுகவில் பா.ஜனதா தலையிடும் சூழல் இல்லை: புகழேந்தி

அ.தி.மு.க.வில் பா.ஜனதா தலையிட கூடிய சூழ்நிலை இருப்பதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று புகழேந்தி கூறினார்.

Update: 2023-02-04 16:23 GMT

நாகர்கோவில்,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் பா.ஜனதா தலையிட கூடிய சூழ்நிலை இருப்பதாக கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். கொள்கை ரீதியாக யாரை பார்த்தும் எங்களுக்கு பயமில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் அப்போதே சொல்லிவிட்டார். பா.ஜனதா மீது மரியாதை தான் உள்ளது. யாருக்கும் நாங்கள் அடிமைகள் இல்லை என்பதை நான் பதிவு செய்கிறேன். பா.ஜனதா எங்களை வழிநடத்தவில்லை. பா.ஜனதா இங்கு நடித்துக் கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி இருந்தால் எதற்காக சுப்ரீம் கோர்ட்டுக்கு போக வேண்டும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கைகள் உள்ளது. பா.ஜனதாவை பொருத்தமட்டில்ஆலோசனை சொல்லலாம். அதிகாரமாக சொல்ல முடியாது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் முதல்-அமைச்சர் ஆவதற்காக பா.ஜனதா சொல்லியது எடப்பாடி பழனிசாமிக்கு தேவைப்பட்டது. இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டும் என்று தான் நாங்கள் அனைவரும் நினைக்கிறோம். சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று சொல்வதாக கேட்கிறீர்கள். ஆனால் இதில் என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சுக்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்