தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-09 05:24 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு ஏராளமான மீனவ கிராமங்கள் உள்ளன. தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவாகி உள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடியில் நேற்றும், இன்றும் கடல் சீற்றமாக காணப்படுகிறது. மேலும் கடலில் 3 அடி உயரத்துக்கு அலைகள் சீறி எழுந்ததையும் காண முடிகிறது.

தூத்துக்குடி பீச் ரோடு கடற்கரை பகுதியில் சுமார் 30 அடி நீளம் கடல் உள்வாங்கியுள்ளது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. கடல் உள்வாங்கியதுதால் அப்பகுதியில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மீன்வளத்துறை அறிவுறுத்தியதன்பேரில் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்