கிணத்துக்கடவு-கோதவாடி சாலையில் தரைமட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

கிணத்துக்கடவு-கோதவாடி சாலையில் தரைமட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து அபாயம்

Update: 2023-05-18 18:45 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் இருந்து கோதவாடி செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த சாலை கோடங்கிபாளையம், நல்லட்டிபாளையம், கோதவாடி, செட்டியக்காபாளையம், நெகமம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. அந்த பாலத்தின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் இல்லை. இரவு நேரங்களில் வாகனங்கள் வளைவில் வரும் போது, வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, கிணத்துக்கடவு-கோதவாடி சாலையில் உள்ள தரைமட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் செல்ல சிரமமாக உள்ளது. மழைக்காலம் தொடங்கும் முன்பு தரைமட்ட பாலத்தில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்