வள்ளியூர் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா

வள்ளியூர் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-12-10 19:25 GMT

வள்ளியூர் (தெற்கு):

வள்ளியூர் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தெப்பத் திருவிழா

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற குடவரை கோவில்களில் ஒன்றான நெல்லை மாவட்டம் வள்ளியூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு தெப்பத்திருவிழா 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி காலையில் மூலவர் தங்க கவசத்தில் காட்சியளித்தார். பின்னர் கும்பாபிேஷகம், உச்சிகால பூஜை நடைபெற்றது. மதியம் உற்சவர் கோவில் முன்மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 10 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முருகபெருமான்- வள்ளி அம்பாள் எழுந்தருளினர். பின்னர் தெப்பத்தைச் சுற்றி 11 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

வெள்ளிமயில் வாகனத்தில் பவனி

பின்னர் கோவிலுக்கு திரும்பிய சுவாமி-அம்பாள், அதிகாலை 1 மணியளவில் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, ராதாகிருஷ்ணன், வெங்கடாசலம், டாக்டர் செல்வன், சுமித்ரா ராஜேஷ், வள்ளியூர் தர்மர், இளவல் அன்பழகன், டி.ஜே.ஆர்.தேவேந்திரன், மேக்ரோ நிறுவன தலைவர் பொன் தங்கதுரை, வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், தி.மு.க. நகர துணை செயலாளர் நம்பி, ஆதிபாண்டி, ரவி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கோவில் கலையரங்கில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கோவில் தோரண வரவேற்பு மேக்ரோ நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சுரேஷ் கண்ணன், செயல் அலுவலர் ராதா மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்