கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா
கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது
பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் முல்லைவனநாதர் உடனுறை கர்ப்பரட்சாம்பிகை அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது.இதனையொட்டி கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு கடந்த 26-ந் தேதி இரவு லட்சார்ச்சனையுடன் தொடங்கி தினந்தோறும் இரவு கொலுவில் வீற்றிருக்கும் அம்மனுக்கு லட்சார்ச்சனையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. 30-ந் தேதி ஏகதின லட்சார்ச்சனையும், 4-ந் தேதி காலை சரஸ்வதி பூஜை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை 4 மணியளவில் சுவாமி சந்திரசேகர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு ஷீரகுண்டம் எனும் திருக்குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் ஆசைத்தம்பி மற்றும் ஊழியர்கள், கிராமமக்கள் செய்து இருந்தனர்.