தெப்பக்காடு யானைகள் முகாம் நாளை முதல் மூடல்.!

தெப்பக்காடு யானைகள் முகாம் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

Update: 2023-07-30 15:44 GMT

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் பகுதிகளில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு கும்கி யானைகள், சவாரிக்கு பயன்படும் யானைகள், ஓய்வு பெற்ற யானைகள் மற்றும் குட்டி யானைகள் உள்ளிட்ட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஆகஸ்ட் 5ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக தெப்பக்காடு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை தெரிவித்து உள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்