தேனி நியூட்ரினோ திட்டம்; வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கோர்ட்டு அவகாசம்

தேனி நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா? என்பது தொடர்பாக மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-08-13 16:12 GMT

மதுரை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2015-ம் ஆண்டு தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, நியூட்ரினோ திட்டம் கைவிடப்பட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி வழக்கை ஒத்திவைத்தனர்.

Full View


Tags:    

மேலும் செய்திகள்