தேனி: விவசாயி வீட்டிற்குள் புகுந்த கரடி - மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டம்

Update: 2023-02-14 10:16 GMT

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் மலையடிவாரப்பகுதியில் அமைந்திருக்கும் வீட்டில் மாரிமுத்து என்ற விவசாயி தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இன்று காலை வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு, மாரிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்துள்ளனர்.

சிறிது நேரம் கழித்த்து மாரிமுத்து தனது வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு சுமார் 3 அடி உயரம் உள்ள கரடி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக விட்டின் கதவைப் பூட்டிவிட்டு, இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கரடியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக வீட்டின் முன்பு ஒரு கூண்டில் தேன், பழங்கள் ஆகியவற்றை வைத்து கரடியை பிடிக்க முயன்றனர். அந்த முயற்சி தோல்வி அடைந்ததால், மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்