பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம் கார்டை மாற்றிக்கொடுத்து ரூ.90 ஆயிரம் நூதன திருட்டு

பென்னேரியில் பணம் எடுக்க உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம் கார்டை மாற்றிக் கொடுத்து ரூ.90 ஆயிரத்தை நூதன முறையில் திருடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-04-07 09:29 GMT

பொன்னேரி நகராட்சி பகுதியில் அடங்கிய குன்னமஞ்சேரி ஆற்றங்கரைமேடு பகுதியில் வசிப்பவர் மொய்தீன் (வயது 58). இவர் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் பொன்னேரி வங்கி கிளை ஒன்றில் கணக்கு வைத்து அதில் பணத்தை சேமித்து வருகின்றார்.

நேற்று முன்தினம் பொன்னேரி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். இவருக்கு ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கத் தெரியாததால் அருகில் நின்ற ஒருவரிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி தெரிவித்து ஏடிஎம் கார்டையும், பாஸ்வேர்ட் எண்ணையும் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை மொய்தீனிடம் கொடுத்தார். இதை கவனிக்காத மொய்தீன் கார்டை வாங்கி கொண்டு கடைக்கு சென்றார்.

அப்போது அவரது செல்போன் எண்ணிற்கு உங்களது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.89,865 எடுக்கப்பட்டுள்ளது என மிஸ்ஜேச் வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மொய்தீன் இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.மில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்