ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை நாகலிங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் ஒரு வங்கியில் ரூ.85 ஆயிரம் பணம் எடுத்துவிட்டு பின்னர் திருச்சுழி சாலையில் உள்ள மற்றொரு வங்கியில் ரூ.35 ஆயிரம் செலுத்தினார். பின்னர் மீதமுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை ஒரு பையில் வைத்து தனது மோட்டார் சைக்கிள் சீட்டின் கீழ் வைத்துவிட்டு பஜாரில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்தபோது பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டு வைத்திருந்த பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றது குறித்து டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.