வியாபாரியிடம் ரூ.2 ஆயிரம், செல்போன் திருட்டு
வியாபாரியிடம் ரூ.2 ஆயிரம், செல்போன் திருட்டு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் பெருமாள்(வயது 45). இவர் கிணத்துக்கடவு பஸ் நிலையம் அருகே இளநீர் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் பெருமாள் நேற்று மதியம் இளநீர் வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்து நின்ற அடையாளம் தெரியாத நபர், இளநீர் வேண்டும் என்று கேட்டார். உடனே பெருமாள், இளநீர் வெட்டுவதற்காக திரும்பியபோது, அந்த நபர் திடீரென கடையில் மஞ்சப்பையில் வைத்திருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள், கிணத்துக்கடவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.