எட்டயபுரத்தில் பேன்சி கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு
எட்டயபுரத்தில் பேன்சி கடையில் ரூ.15 ஆயிரம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் மார்க்கெட் சாலையில் முனியசாமி என்பவர் பேன்சி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலையில் கடைக்கு சென்றபோது பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த கல்லா பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். இதேபோல் எட்டயபுரம் அருகே உள்ள கீழ ஈராலில் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தங்கமாடசாமிக்கு சொந்தமான எலக்ட்ரிக் கடையிலும், அருகே உள்ள பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான அரிசி கடையிலும் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டியை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். ஆனால், அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.