ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

சங்கரன்கோவிலில் ரெயில்வே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

Update: 2022-07-11 16:55 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் கக்கன் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி மகன் நல்லதம்பி. இவர் செங்கோட்டையில் ரெயில்வே துறையில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றபோது சங்கரன்கோவில் ரெயில் நிலையத்தின் முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு செங்கோட்டைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது மோட்டார்சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அவரது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்