மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு

ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை திருடி சென்றனர்.

Update: 2023-06-23 19:41 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் கவிமணி தேசிய விநாயகம் தெருவை சேர்ந்தவர் முத்துமாலா (வயது 72). இவர் முடங்கியாறு சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரை வழிமறித்து நான் போலீசாக உள்ளேன். அந்தப் பக்கம் செல்ல வேண்டாம் அங்கு சண்டை நடக்கிறது. ஆகையால் உங்கள் கழுத்தில் இருக்கும் 3 பவுன் நகையை கழட்டி கொடுங்கள் பத்திரப்படுத்தி தருகிறேன் என கூறினர். மேலும் ஒரு பேப்பரில் மடித்து அந்த நகையை கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர். வீட்டில் வந்து பேப்பரில் மடித்து இருந்த நகையை பார்த்த முத்து மாலா அதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசியை சேர்ந்த மன்சூர் (51) உள்பட 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையத்தில் மூதாட்டியிடம் நூதன முறையில் நகையை திருடி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்