வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு

வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-21 23:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார். பூண்டு வியாபாரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஹரிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு உதயகுமார் அவரது மாமனார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக உதயகுமார் திருவண்ணாமலையில் தங்கி இருந்து பூண்டு வியாபாரம் செய்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று உதயகுமார் வடுகப்பட்டியில் தான் வசித்த வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த நகை, பணம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் எனது வீட்டில் இருந்த ரூ.15 லட்சம், 20 பவுன் நகைகள் திருடுபோய் உள்ளது. எனக்கு எனது மாமனார் சுப்புராஜ் கணேசன், அவரது மனைவி ஜமுனா ராணி உள்பட 7 பேர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்