வீட்டில் நகை, பணம் திருட்டு

சுரண்டையில் வீட்டில் நகை, பணம் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-12-26 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை ஆலடிப்பட்டி ரோடு பகுதியில் வசித்து வருபவர் வசீகரன் (வயது 47). இவர் சுரண்டை பழைய மார்க்கெட் தெருவில் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார். வசீகரன் தனது குடும்பத்தினருடன் கடந்த 23-ந் தேதி திருச்செந்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று முன்தினம் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 5 கிராம் கம்மல், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சுரண்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்