ஆம்னி பஸ்சில் வைத்திருந்த தங்க, வைர நகைகள் திருட்டு

கிருஷ்ணகிரியில் ஆம்னி பஸ்சில் வைத்திருந்த தங்க, வைர நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2022-06-02 15:51 GMT

கிருஷ்ணகிரி:

ஆம்னி பஸ்

கர்நாடக மாநிலம், பெங்களூரு கோரமங்களா டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 36). இவருடைய தந்தை சூரத் ஆழ்வார் மற்றும் தாய் உமாராணியுடன் கோவையில் நடைபெறும் உறவினர் திருமணத்திற்காக பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

அந்த பஸ் காலை 9.20 மணிக்கு கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சாப்பிடுவத்றகாக நிறுத்தப்பட்டது. அந்த நேரம் ஆர்த்தி தனது குடும்பத்தினருடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கி சாப்பிட்டார். அந்த நேரம் ஆர்த்தி தன்னுடைய 4 பவுன் தங்க சங்கிலி, 8 கிராம் வைர நகை மற்றும் சில்வர் ஜக் ஒன்று ஆகியன இருந்த பையை பஸ்சில் தனது சீட்டில் வைத்து சென்றார்.

நகைகள் திருட்டு

ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்த போது பஸ்சில் வைத்துவிட்டு சென்ற பை திறந்து இருந்தது. மேலும் அதில் இருந்த நகைகள் திருடப்பட்டு இருந்தது. அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 500 ஆகும். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்