கும்மிடிப்பூண்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது தெரியவந்தது.;
கும்மிடிப்பூண்டி அடுத்த குருவியகரம் கிராமத்தை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 45). வெல்டர் வேலை செய்து வருகிறார். நேற்று மலையப்பன் வேலைக்குசென்ற நிலையில், அவரது மனைவி அன்னபூரணி (38) வீட்டை பூட்டி விட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்புற கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்ட அன்னபூரணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள், அங்கு தனியறையில் இருந்த பீராவை உடைத்து அரை பவுன் நகை, 3 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.