வாலிபரின் செல்போன் திருட்டு

மேலப்பாளையத்தில் வாலிபர் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த செல்போனை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-12-29 20:08 GMT

மேலப்பாளையம்:

நெல்லை மேலப்பாளையம் ஜமைலா தைக்கா தெருவை சேர்ந்தவர் முகமது ஹாருன் (வயது 26). இவர் அங்குள்ள ஒரு வங்கி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் செல்போனை வைத்து இருந்தாா். திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர், அந்த செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. அதேபோல் மேலப்பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் (69) என்பவரின் செல்போனை மர்மநபர் பறித்து சென்று உள்ளார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்